Mariappan Thangavelu: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற நான்கு தமிழர்களும் பதக்கம் வென்றுள்ளோம் - மாரியப்பன் தங்கவேலு-paralympic high jump bronze medal winner from tamil nadu mariappan reached chennai airport - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mariappan Thangavelu: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற நான்கு தமிழர்களும் பதக்கம் வென்றுள்ளோம் - மாரியப்பன் தங்கவேலு

Mariappan Thangavelu: பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற நான்கு தமிழர்களும் பதக்கம் வென்றுள்ளோம் - மாரியப்பன் தங்கவேலு

Sep 14, 2024 11:25 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 14, 2024 11:25 PM IST

  • பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு. பிரான்ஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாரியப்பன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். "தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று முறையும் பதக்கம் வென்றுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த முறை மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என உறுதியாக இருந்தேன். ஆனால் வெண்கலம் கிடைத்தது. பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 29 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 4 பதக்கங்கள் வென்றுள்ளோம். அடுத்தடுத்து வரும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா நம்பர் 1 நாடாக வரும் என நம்புகிறேன்" என்றார்.

More