Palani: புனித தீர்த்தங்களுடன் சிறப்பு அபிஷேகம்! பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani: புனித தீர்த்தங்களுடன் சிறப்பு அபிஷேகம்! பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Palani: புனித தீர்த்தங்களுடன் சிறப்பு அபிஷேகம்! பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published Apr 05, 2025 06:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 05, 2025 06:58 PM IST

  • அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுபாணி கோயில் அடிவாறத்தில் உள்ள திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை சமேதர் மற்றும் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஏப்ரல் 14ஆம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து பழனிஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும்‌ மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

More