Tamil News  /  Video Gallery  /  Pak International Airlines Stares At Shutdown Over Fuel Crisis; 322 Flights Cancelled In 10 Days

Pakistan: பண பாக்கி! எரிபொருள் இல்லாமல் ரத்தாகும் விமானங்கள் - மூடும் நிலையில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்

Oct 25, 2023 08:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 25, 2023 08:12 PM IST
  • கடந்த 10 நாள்களில் 300க்கும் மேற்பட்ட விமானங்களை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அரசால் இயக்கப்படும் இந்த விமானம் போதிய எரிபொருள் இல்லாத காரணத்தால் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஸ்டேட் ஆயில் நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை செலுத்தாத நிலையில் இந்த விமானத்துக்கான எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், இயக்கத்தில் இருந்த விமானங்கள் புறப்படும் சரியான நேரம் குறித்தும் உறுதியான தகவல்கள் தெரிவிக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வேறு விமானங்கள் மூலம் பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்ப வைக்கபட்டனர். அத்துடன் இந்த அசெளகரியத்துக்கு பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மோசமான நெருக்கடியாக உள்ளது. தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடர்ந்த பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸை மூடவேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம் என கூறப்படுகிறது.
More