Pak flyer misbehave: விமானத்தில் அட்டூழியம்!பாக். பயணிக்கு விமானி தக்க கவனிப்பு
பாகிஸ்தானிலுள்ள பெஷாவார் நகரிலிருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென எழுந்து நின்று விமானத்தின் ஜன்னல்களை எட்டி உதைப்பதும், சீட்டுகளை குத்துவதுமாக சலசலப்பை ஏற்படுத்தினார். பின்னர் விமானத்தில் இருந்த விமானக்குழுவினர் அவரை மெல்ல அமைதிப்படுத்தி விதிமுறைப்படி கைககளை கட்டி அமர வைத்தனர். துபாய் செல்லும் வரை அவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விமானிகள் பின்னர், துபாய் விமான நிலையத்தை அடைந்தவுடன் பாதுகாப்பு அலுவலர்களின் உதவியுடன் அந்த பயணியை மீண்டும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தினர். விமானத்தில் அந்த பயணி செய்த அட்டூழியங்களின் விடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து விமானம் புறப்பட்டவுடன் திடீரென அந்த பயணி தன்னை விமானத்தை விட்டு கீழே இறக்கிவிடுாறு கூறியுள்ளார். இதற்கு விமானக்குழுவினர் மறுப்பு தெரிவிக்கவே, தனது சட்டையை கழட்டி விட்டு பணியன் அணிந்தவாறு சீட்டுகளை கைகளால் குத்தவும், ஜன்னல்கள் எட்டி உதைக்கவும் செய்துள்ளார் அந்த நபர். அத்துடன் இருபுறமும் உள்ள சீட்டுகளுக்கு நடுவே உள்ள பாதையில் படுத்துக்கொண்ட நமாஸ் செய்துள்ளார். இவர் செய்த செயல்களை அனைத்தையும் விமானத்தில் இருந்தவர்கள் விடியோவாக எடுத்துள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் இருந்த அவரது கைகளை கட்டிய விமானிகள் ஒரு வழியாக கட்டுப்படுத்தி விமானம் தரையிறங்கியதும் பாதுகாவலர்களின் பாதுகாப்போடு, மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர்.