Madurai Accident: மதுரையில் பயங்கரம்.. ஜேசிபி ஆபரேட்டரை காவு வாங்கிய தோரண வாயில்!
- மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இருந்த தோரண வாயிலை (ஆர்ச்) இடிக்கும்போது தூண் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜேசிபி இயந்திரம் மீது இடிந்த தூண் விழுந்ததில் திருமங்கலத்தைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் உயிரிழந்தார். அருகில் நின்றுகொண்டிருந்த ஒப்பந்ததாரர் நல்லதம்பியும் காயம் அடைந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையும், திட்டமிடலும் இன்றி ஆர்ச் இடிக்கப்பட்டதில் ஜேசிபி டிரைவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மாட்டுத்தாவணி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.