Tamil News  /  Video Gallery  /  Onam Joy In Sub-zero Antarctica With 'Pookalam' On Frozen Lake; Anand Mahindra In Awe Of Art

Onam Pookolam in Antartica: அன்டார்டிகாவில் உறைந்து போன ஏரியில் ஓணம் பூக்கோளம்!

22 September 2022, 23:23 IST Muthu Vinayagam Kosalairaman
22 September 2022, 23:23 IST

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மலையாளகள் கொண்டாடும் திருவிழாவான ஓணம் பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகாபலி மன்னரின் வருகை வரவேற்கும் விதமாக அமைந்த இந்த விழாவை பூமியில் பூஜ்ஜயத்துக்கு கீழ் வெப்பநிலை அமைந்த பகுதியான அன்டார்டிகாவில் மலையாளிகள் சிலர் கொண்டாடியுள்ளனர். வழக்கமான ஓணம் பண்டிகையில் முக்கிய நிகழ்வாக திருவோணம் நாளில் பூக்கோலங்கள் வரைந்து இருப்பிடம் அலங்கரிக்கப்படும். ஆனால் துருவப் பகுதிகளில் பூக்கள் கிடைக்காத காரணத்தால் அதற்கு பதிலாக பனியால் பாரம்பரிய தோற்றத்தில் அழகிய கோலம் வரைந்துள்ளனர். இந்த கோலத்தை உருவாக்கி சுத்தியல் உள்பட சில கூரான பொருள்களை பயன்படுத்தியுள்ளனர். மிகவும் அழகான தோற்றத்தில் அமைந்திருக்கும் இந்த கோலத்தில் பாம்பு போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும் படகு, தென்னை மரங்கள் போன்ற கேரளாவின் அடையாளங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த விடியோ வைரலாகியுள்ளது. இந்த விடியோ தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாக கூறி பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திராவும் அதை பகிர்ந்துள்ளார்.

More