Tamil News  /  Video Gallery  /   On Camera: Watch How Russian Jet Collided With Us Mq-9 Reaper Drone Over Black Sea

US Drone Attack: அமெரிக்கா ட்ரோன் இடைமறித்த ரஷ்யா ஜெட் - பரபரப்பான விடியோ

17 March 2023, 13:54 IST Muthu Vinayagam Kosalairaman
17 March 2023, 13:54 IST
  • US Drone and Russia Military Jet Intercept: கடந்த இரு நாள்களுக்கு முன்னர் கருங்கடல் மேற்பரப்பில் ரஷ்யாவின் ராணுவ ஜெட், அமெரிக்காவின் ட்ரோனை இடைமறித்து விபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விடியோவை அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ளது. உக்ரனை வார் தொடக்கத்துக்கு பின்னர் உலகின் முன்னணி அணுசக்தி நாடுகளாக திகழும் அமெரிக்கா - ரஷ்யா இடையே நிகழ்ந்த முதல் நேரடி சந்திப்பாக இது அமைந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரு நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர்கள், ராணுவ உயர் அலுவர்கள் தொலைபேசியில் உரையாடல் நிகழ்த்திய பின்னர் பெண்டகன் இந்த விடியோவை வெளியிட்டுள்ளது. சர்வதேச வான்வெளியில் உளவு பணியில் ஈடுபட்டபோது அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன் விபத்துக்குள்ளானது. பெண்டகன் வெளியிட்டுள்ள 42 விநாடி விடியோவில் ரஷ்யாவின் SU-27 போர் ஜெட் விமானம், அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோனை பாதுகாப்பற்ற முறையில் நெருங்குகிறது. அப்போது எரிபொருளை கக்கியவாறு ரஷ்யா விமானம் கடந்த சென்ற நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ரஷ்ய ஜெட் விமானம் ட்ரோன் செயல்பாட்டை தடுக்கும் விதமாக வேண்டுமென்றே இதை செய்ததாக அமெரிக்கா தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த விடியோவில் சம்பவத்தின் முழு காட்சிகளும் இடம்பெறவில்லை. அமெரிக்கா ட்ரோன் அழிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சர், ரஷ்யா அமைச்சரிடம் பேசியுள்ளார். இதுபோன்ற மோதல்கள் ஏற்படுவது அரிதானது என்றாலும் உக்ரன் போர் நடைபெற்று வரும் இந்த சூழலில், அமெரிக்கா - ரஷ்யா இடையே நேரடி மோதல்கள் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
More