Accident in UP: குண்டும் குழியுமான சாலை பற்றி பேசியபோது கவிழ்ந்து விழுந்த ஆட்டோ!
உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா என்ற பகுதியில் சாலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், குண்டும் குழியுமாக இருப்பதாகவும் நிருபரிடம் அந்தப் பகுதிவாசி ஒருவர் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அவர் அங்குள்ள மோசமான சாலை நிலைமை பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ ஒன்று மழை நீரால் தேங்கிய சகதியில் சிக்கி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்தக் காட்சி அப்படியே அந்த நிருபரின் கேமராவில் பதிவாகியுள்ளது. பின் உடனடியாக அங்கிருந்தவர்கள் கீழே கவிழ்ந்த ஆட்டோவில் சிக்கிகொண்டிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் அந்த ஆட்டோவில் பயணித்த பெண் காயமடைந்தார். இதன்பின்னர் மீண்டும் பேச்சை தொடங்கிய அந்த நபர், இதேபோல் நாள்தோறும் குறைந்தது 20 முறையாவது நிகழ்கிறது என வேதனையுடன் தெரிவித்தார். மேலும், கடந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக இருக்கும் இந்த சாலை சரிசெய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சலையின் தற்போதையை நிலைமையை சமூக வலைத்தளங்களில் அந்த நிருபர் பதிவிட்டார். அதில் விபத்து சம்பவத்துக்கு பின் தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட போதிலும் முழுவதுமாக சரிசெய்யப்பட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.