தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  On Cam: Blast In Delhi-ncr Claims One Life; Firecracker-laden Vehicle Explodes In Noida Market

Noida Bomb Blast: எலெக்ட்ரிக் ரிக்‌ஷாவில் குண்டு வெடிப்பு - அதிர்ச்சி சிசிடிவி

Mar 01, 2023 09:48 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 01, 2023 09:48 PM IST
  • டெல்லி என்சிஆர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் திடீரென வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மார்கெட் பகுதியில் பட்டாசுகள் நிரப்பி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ரிக்‌ஷா, யாரும் எதிர்பாரக்காதபோது வெடித்துள்ளது.இந்த காட்சி அங்குள்ள கடையில் இருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகியிருந்தது.ஜெகநாத் யாத்திரைக்காக பட்டாசுகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாகனம் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அதில் இருந்த பட்டாசுகள் அங்கும் இங்குமாக சிதறி வெடித்தன. வெடித்த சத்தம் கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் பலரும் அலறியடித்து ஓடினர்.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்து இருப்பதாகவும் நொய்டா போலீசார் தெரிவித்துள்ளனர்.
More