78 பேரன், பேத்திகள்.. ஆடல், பாடலுடன் இறுதி மரியாதை - மூதாட்டி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  78 பேரன், பேத்திகள்.. ஆடல், பாடலுடன் இறுதி மரியாதை - மூதாட்டி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்

78 பேரன், பேத்திகள்.. ஆடல், பாடலுடன் இறுதி மரியாதை - மூதாட்டி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்

Dec 20, 2024 05:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 20, 2024 05:40 PM IST

  • மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி பரமத்தேவர் மனைவி நாகம்மாள். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96வது வயதில் இந்த மூதாட்டி உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள், நான்கு மகள்கள் உள்ள சூழலில், மூன்று தலைமுறையை கண்ட இந்த முதாட்டிக்கு தற்போது வரை இவரது பேரன், பேத்திகளாக 78 பேர் உள்ளனர். தனது இறப்புக்கு பின் இறுதி சடங்கு நிகழ்வை மற்றவர்களை போல சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி சந்தோசமாக வழி அனுப்ப வேண்டும் என மூதாட்டி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம், பேரன் பேத்திகள் இணைந்து ஆடல் பாடல் நிகழ்ச்சி, குடும்ப பெண்களின் கும்மியாட்டம் மற்றும் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாடி இறுதி மரியாதை செலுத்தினர்.

More