Aadi Perukku 2024: திருச்சி காவிரி கரையில் ஆடிப்பெருக்கு வழிபாட்டில் ஈடுபட்ட புதுமணத்தம்பதிகள்
- திருச்சி(தமிழ்நாடு): ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருச்சி காவிரி ஆற்றின் கரையில் ஆடிப்பெருக்கை ஒட்டி வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான தம்பதிகள் வந்திருந்து, தங்கள் தாலியை பிரித்து மாற்றி, காவிரித்தாயிடம் வாழ்வு செழிக்க பிரார்த்தனை செய்தர். சிலர் தங்கள் திருமணத்தின்போது போட்ட மாலைகளை ஆற்றில் விட்டனர்.