தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Nasa Scripts History As Most Powerful Rocket Ever Artemis 1 Blasts Off To Moon

Artemis 1 launch: உலகின் சக்தி வாய்ந்த ஆர்டிமிஸ் 1 ராக்கெட் நிலவை நோக்கிய பயணம்

Nov 17, 2022 01:28 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 17, 2022 01:28 PM IST

நாசாவின் அடுத்த தலைமுறை ராக்கெட்டான ஆர்டிமிஸ், நிலவை நோக்கிய சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது. புளோரிடாவில் இருந்து இந்த ராக்கெட் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. அப்போலோ மூன் மிஷன் என்ற நிலவுக்கான பணிகளுக்கு பிறகு விண்வெளி வீரர்கள் யாரும் இடம்பெறாத இந்த பயணத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு நாசா மீண்டும் தொடங்கியுள்ளது. 32 அடுக்குகள் கொண்டு விண்வெளி ஏவுதல் அமைப்பு கொண்ட ராக்கெட், ஆரியன் என்ற கேப்ஸ்யூல் மூலமாக நிலவின் சுற்றுப்பாதையை மூன்று வாரங்களுக்கு சுற்றி சோதனை மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தில் விண்வெளி குழுக்கள் யாரும் இடம்பெறவில்லை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நாசாவில் நடைபெற்றுள்ளது. அடுத்த தலைமுறை ராக்கெட் என்று அழைக்கப்படும் இந்த ஆர்டிமிஸ் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள், சூறாவளி காற்று போன்று தொடர் இயற்கை பேரிடருக்கு பிறகு 10 வாரங்கள் கழித்து, மூன்றாவது முயற்சியிலேயே விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பல பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் ஆர்டிமிஸ் 1 என்ற பெயரில், ஆரியன் கேப்ஸ்யூல் மற்றும் SLS எனப்படும் விண்வெளி ஏவுதல் அமைப்பு கொண்ட முதல் ராக்கெட்டாக அமைந்துள்ளது. போயிங் மற்றும் லாக்கீட் மார்டின் ஆகிய ஏர்கிராப்ட் நிறுவனங்கள் நாசாவுடன் இணைந்து இந்த ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. பண்டைய கிரேக்க கடவுனான அப்போலோவின் இரட்டை சகோதரியான ஆர்டிமிஸ் பெயர் இந்த ராக்கெட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆறு அப்போலோ மிஷன்களில் 12 விண்வெளி வீரர்கள் நிலாவில் கால் பதித்துள்ளனர். 1969 முதல் 1972 வரை நிலவில் கால் பதிக்க சென்ற ராக்கெட் என்ற பெருமையை அப்போலோ பெற்றுள்ளது. ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டின் 4 பிரதான R 25 எஞ்சின்களின் சத்தங்களுடன் கவுண்டவுன் தொடங்கப்பட்டது. அப்போது பலத்த கைதட்டல்களும், ஆராவாரங்மும் எழுந்தன.

More