Happiest Place in India: 100 சதவீதம் படிப்பறிவு! இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமான வடகிழக்கு மாநிலம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Happiest Place In India: 100 சதவீதம் படிப்பறிவு! இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமான வடகிழக்கு மாநிலம்

Happiest Place in India: 100 சதவீதம் படிப்பறிவு! இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலமான வடகிழக்கு மாநிலம்

Apr 20, 2023 11:24 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 20, 2023 11:24 PM IST

  • வடகிழக்கு மாநிலமான மிசோரம் இந்தியாவின் மகிழ்ச்சியான மாநிலம் என்று ஆய்வுகளின் முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் 100 சதவீதம் படிப்பு அறிவு பெற்றுள்ளது. பல்வேறு சவால்மிக்க சூழ்நிலைகளிலும் அந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களது திறன்களை வளர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு செய்து வருகிறது. இந்தியாவில் 100 சதவீதம் படிப்பறிவு பெற்ற இரண்டாவது மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது மிசோரம். குருக்கிராம் நகரை சேர்ந்த நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள தனித்துவமான சமூக அமைப்பு மாநிலத்தை மகிழ்ச்சியாக வைப்பதற்கு முக்கிய பங்கு ஆற்றியதாக கூறப்பட்டுள்ளது. இயக்கவியல், சமூக விஷயம், மத நம்பிக்கைகள் உள்பட ஆறு அளவுகோல்களில் மகிழ்ச்சி குறியீடு கணக்கிடப்படுகிறது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம், உடல் மற்றும் மனநல நல்வாழ்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

More