அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

Published Mar 05, 2025 05:00 PM IST Karthikeyan S
Published Mar 05, 2025 05:00 PM IST

  • மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, தவெக உள்ளிட்ட 56-க்கும் மேற்பட்்ட கட்சிகள் பங்கேற்றன. பாஜக, நாம் தமிழர், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.

More