ஒரு லிட்டர் ரசாயனத்தில் 500 லிட்டர் பால்.. 20 ஆண்டுகளாக போலி பால் உற்பத்தி! உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி
- உத்தரபிரதேசத்தில் ரசாயனம் மூலம் போலியாக பால் உற்பத்தி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொழிலதிபர் ஒருவர் 1 லிட்டர் ரசாயனம் கலந்து 500 லிட்டர் அளவில் போலி பாலை தயாரித்து வருகிறார். அஜய் அகர்வால் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக போலி பால் மற்றும் பனீர் உள்பட பால் சார்ந்த பொருள்களை தயாரித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசாயனத்தை வைத்து பால் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அதிகாரிகளிடம் செய்து காண்பிக்கும் விடியோ வெளியாகியுள்ளது.