Thaiposam Therottam: ரங்கா.. கோவிந்தா கோஷம்.. திருச்சி ரெங்கநாதர் கோயிலில் கோலாகலமாக நடந்த தை தேரோட்டம் நிகழ்வு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thaiposam Therottam: ரங்கா.. கோவிந்தா கோஷம்.. திருச்சி ரெங்கநாதர் கோயிலில் கோலாகலமாக நடந்த தை தேரோட்டம் நிகழ்வு

Thaiposam Therottam: ரங்கா.. கோவிந்தா கோஷம்.. திருச்சி ரெங்கநாதர் கோயிலில் கோலாகலமாக நடந்த தை தேரோட்டம் நிகழ்வு

Published Feb 11, 2025 09:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Feb 11, 2025 09:15 PM IST

  • திருச்சி, ஶ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் தைத் தேரோட்டம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் திருச்சி ரெங்கநாதர் கோயில் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா உற்சவம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைத்தேர் உற்சவத்தின் ஒன்பதாம் திருநாள் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் வெகு விமரிசையாக பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன் வீடியோ காட்சிகளை பார்க்கலாம்

More