Tamil News  /  Video Gallery  /  Kfc Germany Apologises For Promoting Crispy Chicken On Anti-jewish Pogrom

Outrage against kfc: யூதர்கள் மீதான தாக்குதல்..! சர்ச்சையில் சிக்கிய கேஎஃப்சி

10 November 2022, 23:38 IST Muthu Vinayagam Kosalairaman
10 November 2022, 23:38 IST
  • ஜெர்மனியில் யூதார்கள் மீது நாசிப்படை தாக்குதல் நடத்திய முக்கிய நிகழ்வு ஒன்றை நினைவுப்படுத்தி, பொதுமக்கள் ஃப்ரைடு சிக்கின் விருந்து ஏற்பாடு செய்து சாப்பிடுமாறு புரொமோஷன் கேஎஃப்சி நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பின்னர் இந்த விவகாரத்தில் தொழில்நுட்பத்தை காரணம் காட்டி மன்னிப்பும் கோரியுள்ளது. ஜெர்மனி வரலாற்றி 1938 நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஹிட்லரின் நாஜிப்படை, யூதர்கள் மீது அவர்களின் இருப்பிடம், உடமைகள், சொத்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இரண்டு நாள்கள் இரவுபொழுதில் நடைபெற்ற இந்த தாக்குதலை ஜெர்மானியார்கள் நொறுக்கப்பட்ட இரவுகள் என்றே அழைத்து வருகிறார்கள். வரலாற்றில் கருப்பு நாளாக அமைந்த இந்த நாளை நினைவுபடுத்தி பொதுமக்கள் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுமாறு வாடிக்கையாளர்களுக்கு நோட்டிபிக்கேஷன்களை அனுப்பியுள்ளது. இது ஸ்கீரின்ஷாட் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சர்ச்சை ஏற்பட்டது. இதுதொடர்பாக வாடிக்கையாளர்களும்புகார் அளித்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு என விளக்கம் அளித்த கேஎஃப்சி நிறுவனம் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. காலண்டரில் வரும் நிகழ்வுகளின் அடிப்படையில் சிஸ்டமில் இருந்து தானாகவே இந்த தகவல் வாடிக்கையாளர்களுக்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More