Accident: பணம் தர முடியாது! கேரளாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் இடித்து கொலை செய்ய முயற்சித்த நபர் - சிசிடிவி காட்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Accident: பணம் தர முடியாது! கேரளாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் இடித்து கொலை செய்ய முயற்சித்த நபர் - சிசிடிவி காட்சி

Accident: பணம் தர முடியாது! கேரளாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் இடித்து கொலை செய்ய முயற்சித்த நபர் - சிசிடிவி காட்சி

Published Jul 17, 2024 07:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jul 17, 2024 07:55 PM IST

  • கேரளா மாநிலம் கன்னூரில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு எரிபொருள் நிரப்பிய நபர், பணம் தராமல் செல்ல முயன்றுள்ளார். உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியரான அனில் அந்த நபரின் கார் முன்னே சென்று தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த நபர் திடீரென காரை அனில் மீது ஏற்றினார். இதில் அனில் நிலை தடுமாறி காரின் போனட் மீது விழுந்தார். பின்னர் கார் பேனட்டை பிடித்து தொங்கியபடி இருந்த அனிலை, பணம் தராமல் ஏமாற்றிய நபர் தனது காரில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து கைகளில் காயத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியரான அனில் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்காமல் காரில் சென்ற நபர் காவல்துறை ட்ரைவர் சந்தோஷ் குமார் என தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்ததுடன், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைதும் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

More