தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Karnataka: Watch How A Former Intelligence Bureau Officer Was Mowed Down In Mysore

Former IB officer car accident: கார் மோதி முன்னாள் உளவுத்துறை அலுவலர் உயிரிழப்பு

Nov 07, 2022 11:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 07, 2022 11:40 PM IST

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு பல்கலைகழக வளாகத்தில் மாலைபொழுதில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முன்னாள் உளவுத்துறை அலுவலர் மீது எதிர் திசையில் வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோது பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து உளவுத்துறை அலுவலர் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சியில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் உளவுத்துறை அலுவலர், பல்கலைகழகத்தில் கம்யூட்டர் சையின்ஸ் துறை கட்டடம் அருகே இடது ஓரத்தில் மெதுவாக நடைபயிற்சி மேற்கொள்கிறார். அப்போது அவருக்கு எதிர்திசையில் இருந்து வேகமாக வந்த கார், அவர் இடித்து தள்ளியுள்ளது. இந்த காட்சியில் கார் வேண்டுமென்றே அவரை நோக்கி வேகமாக வருவது போல் தெரிவதால், இந்த இறப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் இதை விபத்து என கருதிய போலீசார், கார் ஒன்று கட்டுப்பாடு இல்லாமல் வந்து மோதிவிட்டு சென்றதாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சந்தேக மரணம் என முடிவு செய்த பின்னர் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More