தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Kanimozhi Press Meet At Thoothukudi

Kanimozhi: 'தூத்துக்குடி மீண்டும் புகழ்பெற்ற தொழில் நகரமாக மிளிரும்' - கனிமொழி உறுதி!

Mar 21, 2024 07:41 PM IST Karthikeyan S
Mar 21, 2024 07:41 PM IST
  • தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் 2-வது முறையாக போட்டியிடும் கனிமொழி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "தூத்துக்குடிக்கு பல தொழில் நிறுவனங்களைக் கொண்டு வர வேண்டும், முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்போடு தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அதனால், விரைவில் தூத்துக்குடி மறுபடியும் ஒரு புகழ்பெற்ற தொழில் நகரமாக மிளிரும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறேன்." என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
More