தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanimozhi Mp: "விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம்" - கனிமொழி எம்.பி.,நம்பிக்கை!

Kanimozhi MP: "விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம்" - கனிமொழி எம்.பி.,நம்பிக்கை!

Jun 19, 2024 12:38 PM IST Karthikeyan S
Jun 19, 2024 12:38 PM IST
  • தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி செவ்வாய்க்கிழமை மாலை கோவில்பட்டி பகுதியில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில், மக்களவைத் தொகுதி பிரதிநிதியாக எனக்கு வாய்ப்பு வழங்கி அனைவருக்கும் நன்றி. மகளிர் உரிமைத் தொகை, யாருக்கெல்லாம் நியாயமாக கிடைக்க வேண்டுமோ, அவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். 100 நாள் வேலைக்குரிய நாட்கள், அதற்குரிய ஊதியம் உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தோம். ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறவில்லை. விரைவில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் என நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.
More