ஆடி முடிந்து வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு 100 வகையான உணவுகளுடன் விருந்து..! அசத்திய மாமியார்-kakinada family treats son in law with a feast of 100 food items video goes viral - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஆடி முடிந்து வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு 100 வகையான உணவுகளுடன் விருந்து..! அசத்திய மாமியார்

ஆடி முடிந்து வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு 100 வகையான உணவுகளுடன் விருந்து..! அசத்திய மாமியார்

Aug 12, 2024 06:29 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 12, 2024 06:29 PM IST
  • தமிழ்நாடு நாள்காட்டியின்படி ஆடி மாதமானது, தெலுங்கு நாள்காட்டியில் ஆஷடம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் தமிழுக்கு முன்னரே தெலுங்கில் ஆஷடம் மாதமானது நிறைவடைகிறது. இதையடுத்து ஆஷடம் மாதம் முடிந்து வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு 100 வகையான இனிப்பு உணவுகளுடன் மாமியார் வீட்டார் தடால் புடால் விருந்து வைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்த ரவி தேஜா என்பவருக்கும் தாமரடா பகுதியை சேர்ந்த ரத்னகுமாரி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்துக்கு பின்னர் முதல் ஆஷடம் மாதத்துக்கு வருகை புரிந்த மணமகன் ரவிதேஜாவுக்கு மாமியார் வீட்டார் பல்வகை இனிப்பு பலகாரங்களுடன் விருந்து வைத்துள்ளனர். இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
More