Jammu kashmir: காஷ்மீரில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை தீவிரம்
- இந்திய ராணுவம், ஜே&கே போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கை ஆகஸ்ட் 12ம் தேதி 3வது நாளாகிறது. கோகர்நாக்கின் அஹ்லான் கடோல் காடுகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை கண்காணிக்க ஆகஸ்ட் 10ம் தேதி ஆபரேஷன் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 10 அன்று அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். நடவடிக்கையை அதிகரிக்க இப்பகுதியில் கூடுதல் படைகள் விரைந்துள்ளன. 10,000 மீட்டர் உயரத்தில் படைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது