Tamil News  /  Video Gallery  /  Jodhpur Doctor Turns Demon: Chains Dog To Car And Drags It Mercilessly; Fir Filed

Doctor Chains Dog to Car: காரில் கட்டி நாயை சாலையில் இழுந்து சென்ற மருத்துவர்

19 September 2022, 15:31 IST Muthu Vinayagam Kosalairaman
19 September 2022, 15:31 IST

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் நாய் ஒன்றை தனது காரில் கட்டி வைத்து மருத்துவர் ஒருவர் இழுத்துச் சொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருத்துவரான ரஜ்னீஷ் குவாலா என்பவர் நாய் ஒன்றை தனது காரின் கதவு பகுதியில் கட்டி வைத்து, பின் காரை இயக்கி அதன் வேகத்துக்கு ஏற்ப நாயை நகரில் உள்ள சாலையில் ஓடவைத்துள்ளார். காரின் பின்னே ஓடி வந்த அந்த நாயின் வாயில் சிறிய துணி ஒன்றையும் வைத்து அவர் கட்டியிருந்தார். ஒரு கட்டத்தில் காரின் வேகத்துக்கும், கட்டப்படிருந்த கயிற்றின் இறுக்கத்தாலும் ஓட முடியாமல் நிலைதடுமாறிய நாய் சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியுள்ளது. இதைக் கண்ட பைக்கர் ஒருவர் வேகமாக சென்று அந்த காரை வழிமறித்து பின் கட்டப்பட்டிருந்த நாயை விடுவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கூடி, நாயிடம் கொஞ்சம் கூட இரக்கமின்றி இப்படி மோசமாக நடந்துகொண்ட மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நகரின் நாய் பாதுகாப்பு மையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட, மீட்கப்பட்ட அந்த நாய் ஒப்படைக்கப்பட்டது. ஏராளமான காயங்களும், எலும்பு முறிவுகளோடும் மீட்கப்பட்ட நாயை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நாயை கயிற்றஆல் கட்டி காரில் ஓடவைத்து கொடூர செயலில் ஈடுப்பட்ட மருத்துவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மருத்துவருக்கு நோட்டீர் அனுப்பப்பட்டுள்ளது.

More