Jayakumar Press Meet: அனைத்து கட்சி கூட்டம்: தீர்மானத்தில் இரண்டு திருத்தங்களை சொல்லியுள்ளோம் - ஜெயக்குமார் பேட்டி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayakumar Press Meet: அனைத்து கட்சி கூட்டம்: தீர்மானத்தில் இரண்டு திருத்தங்களை சொல்லியுள்ளோம் - ஜெயக்குமார் பேட்டி

Jayakumar Press Meet: அனைத்து கட்சி கூட்டம்: தீர்மானத்தில் இரண்டு திருத்தங்களை சொல்லியுள்ளோம் - ஜெயக்குமார் பேட்டி

Published Mar 05, 2025 08:28 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 05, 2025 08:28 PM IST

  • மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழ்நாடு அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, தவெக உள்ளிட்ட 56-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றன. பாஜக, நாம் தமிழர், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இந்த கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, "தமிழ்நாட்டுக்கான உரிமையை பல்வேறு விஷயங்களில் திமுக தாரைவார்த்துள்ளது. பல்வேறு விஷயங்களில் இரட்டை வேடம் போட்டுள்ளது" என்றார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய முழு வீடியோ இதோ

More