Israel-Hamas war: 'போருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கு'-இஸ்ரேல் பிரதமர்
- பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 14 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். "இந்தப் போருக்கு அதிக விலையை நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் போரை நடத்தித் தான் ஆக வேண்டும்' என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு. கடந்த வெள்ளிக்கிழமை 5 இஸ்ரேல் வீரர்களும், அடுத்த நாள் 9 வீரர்களும் போரில் உயிரிழந்தனர். இதுவரை ஹமாஸுக்கு எதிரான சண்டையில் இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் தொடுத்ததை அடுத்து, இஸ்ரேல் ராணுவம் காஸா மீது போர் தொடுத்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.