தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Iranian Police Storm Tehran Metro Station; Thrash Women For Not Wearing Hijab

Iran police thrash women:ஹிஜாப் அணியாத பெண்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல்

Nov 18, 2022 04:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 18, 2022 04:55 PM IST

இரானில் உள்ள தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையத்தில், ஹிஜாப் அணிந்த தலையை மூடாத பெண்கள் மீது கலாச்சார போலீசார் குழு கடுமையான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயுள்ளது. ஹிஜாப் அணியாத பெண்கள் மீது தடியடி நடத்துவது, தூப்பாக்கியால் சுடுவது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை மீது தாக்குதலில் ஈடுபடலாம், தேவைப்பட்டால் கொலையும் செய்யலாம் என்ற உத்தரவுக்கு பின்னர் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது. மாஷா அமினி என்ற இளம்பெண் ஒருவர் தனது தலையை ஹிஜாப் கொண்டு சரியாக மறைக்கவில்லை எனக் கூறி கலாச்சார போலீஸ் குழு அவரை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் நாடு முழுவதும் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெஹ்ரான் நகர மெட்ரோ ரயில் நிலையத்தில் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல், துப்பாக்கி சூடும் நிகழ்த்தியுள்ளனர். கடந்த இரு நாள்களுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த தாக்குதலின் விடியோக்கள் வெளியாகியுள்ளன. திடீர் துப்பாக்கி சூடு காரணமாக ரயில் நிலையத்தில் இருந்து வெளியே நோக்கி பயணிகள் அலறி அடித்து ஓடுகின்றனர். அதேபோல் ரயிலினுள் வைத்து ஹிஜாப் அணியாத பெண்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பெண் ஒருவர் தனது தலையில் இருக்கும் ஹிஜாப்பை எரிப்பது போன்ற காட்சியும் உள்ளது. இதேபோல் 2019ஆம் ஆண்டில் எரிபொருள் உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தபோது 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹிஜாப் போராட்டகாரர்கள் கலாச்சார போலீஸ் குழுவை சேர்ந்த இருவர் கொலை செய்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குருதிஸ்தான் மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகணங்களில் கலாச்சார குழு போலீஸ் படை, 43 பெண்கள், 26 என 342 பேரை கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 15 ஆயிரம் நபர்கள் இந்த விவகாரத்தில் கைது செய்திருப்பதாக இரான் நாட்டு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை அந்நாட்டு அரசு அலுவலர்கள் மறுத்துள்ளனர்.

More