தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  India's Real Elephant Whisperers Pose With Oscar Trophy, Melt Millions Of Hearts

Viral: ஆஸ்கர் விருதுடன் The Elephant Whisperers பட பெல்லி - பொம்மன் தம்பதியினர்

Mar 23, 2023 08:28 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 23, 2023 08:28 PM IST

சிறந்த ஆவணப்படம் என்ற ஆஸ்கர் விருது வென்ற இந்திய ஆவணப்படமான The Elephant Whisperers படத்தில் தோன்றிய பெல்லி மற்றும் பொம்மன் தம்பதியனரிடம் ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்ட நிலையில், அதனை அவர்கள் கையில் ஏந்தியவாறு போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆஸ்கர் விருதை படத்தில் தோன்றிய ரியல் நடிகர்களிடம் ஆஸ்கர் விருதை கொடுத்து அவர்கள் வெளிப்படுத்திய ரியாக்‌ஷனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ஆஸ்கர் விருதுடன் பெல்லி மற்றும் பொம்மன் தம்பதியினர் அழகான புன்னகையை வெளிப்படுத்தியிருக்கும் இந்தப் புகைப்படம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து, அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. முதுமலை பகுதியில் ஆதரவற்று இருந்த யானையை பராமரித்து வரும் உள்ளூர் தம்பதியை பற்றிய கதையை கூறும் விதமாக The Elephant Whisperers படம் உள்ளது.

More