Tamil News  /  Video Gallery  /  India's First Private Rocket Vikram-s Ready For Launch; Here's How It Looks

India 1st private rocket Vikram-S:விண்ணில் செலுத்த தயாரான முதல் தனியார் ராக்கெட்

09 November 2022, 11:43 IST Muthu Vinayagam Kosalairaman
09 November 2022, 11:43 IST

ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் மூலம் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் விண்ணில் செலுத்துவதற்கு தயாராக உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் முயற்சியான இதற்கு பிரரம்ப் (தொடக்கம்) என பெயர் வைக்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் இரண்டு இந்திய மற்றும் ஒரு வெளிநாட்டு பேலோடுகள் (கணிணி தரவுகள் கூடிய ஏந்திரங்கள்) பயணப்பட உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு, நவம்பர் 12 முதல் 16ஆம் தேதிக்குள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட் முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. விண்ணில் உள்ள துணை சுற்றுப்பாதை குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விக்ரம்-எஸ் ராக்கெட் என்பது ஒரு நிலை, துணை சுற்றுப்பாதை ஏவுகணை வாகனமாக அமைந்துள்ளது. இது மூன்று பேலோடுகளை சுமந்து சென்று, விக்ரம் சீரிஸ் விண்வெளி ஏவுகணை வாகனங்களில் பெரும்பாலான தொழில்நுட்பங்களை சோதிக்கவும் ,சரிபார்க்கவும் உதவும். இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸ் ஆதரவின் காரணமாகவே மிக குறுகிய காலத்தில் விக்ரம் ராக்கெட் மிஷன் உருவாக்கி தயார்படுத்தப்பட்டது.ஸ்கை ரூட் நிறுவனத்தின் நிறுவனரும், விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ராக்கெட்டுக்கு விக்ரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் பார்த்த பின்னர் இதை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்துவதற்கான இறுதி நாள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிஷன் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் முதல் முறையாக ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது என்ற பெருமையை பெறுவதுடன், மற்ற தனியார் நிறுவனங்களுக்கான புதிய வாசலை திறக்கவுள்ளது.

More