Houthis Attack: செங்கடல் பககுதியில் ஹவுதிக்கள் தாக்குதல்! தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Houthis Attack: செங்கடல் பககுதியில் ஹவுதிக்கள் தாக்குதல்! தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை

Houthis Attack: செங்கடல் பககுதியில் ஹவுதிக்கள் தாக்குதல்! தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை

Jan 01, 2024 04:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 01, 2024 04:00 PM IST

  • இந்திய கடற்படை வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் கடல்சார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச கப்பல் பாதைகள் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஏமனை தளமாகக் கொண்ட ஹவுதிகள் சமீபத்தில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்த கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய கடற்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வணிகக் கப்பல்களுக்கு விரைவில் உதவி புரிவதற்கும் போர் கப்பல்கள் அடங்கிய கடற்படை பணிக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் போர்கப்பல்களான ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் மோர்முகாவ், ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ஆகியவற்றுடன் பி-81 என்கிற பல பணிகளை மேற்கொள்ளும் விமானம், நீண்ட காலம் வரை நீடிக்கும் கடல் பாதுகாப்பு ட்ரோன்கள் ஆகியவையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. செங்கடல் பகுதியில் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். டிசம்பர் 31ஆம் தேதி இந்த தாக்குதலான நடந்துள்ளது. இதன் காரணமாக இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

More