தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Indian Army In Full Control Of Galwan; Soldiers Play Cricket As China Watches Amid Lac Standoff

கல்வான் பல்லத்தாக்கில் கிரிக்கெட் விளையாடிய இந்திய ராணுவத்தினர்

Mar 04, 2023 08:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 04, 2023 08:40 PM IST
  • India - China Face off: கிழக்கு லடாக் செக்டார் பகுதியில் உள்ல கல்வான் பல்லத்தாக்கில் இந்தியா ராணுவ வீரர்கள் ஜாலியாக கிரிக்கெட் விளையாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டியை திரிசூல் பரிவின், பட்டியாலா பிரிக்கேட் ஏற்பாடு செய்திருந்தது. மிகவும் உயரமான இடத்தில் பூஜ்ஜியத்துக்கு குறைவான வெப்பநிலையில் இந்த கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ந்துள்ளது. கடந்த 2020 மே மாதம் முதல் இந்தியா - சீனா ஆகிய இருநாடுகளின் ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் இந்தியா, சீனா நாடுகளை சேர்ந்த 12க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், மோதல் நடைபெற்ற இந்த கல்வான் பல்லத்தாக்கு பகுதியில் இரு நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். ஜி20 உச்ச மாநாட்டின்போது தில்லியில் வைத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங்க் ஆகியோரின் சந்திப்புக்கு பின்னர் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
More