Tamil News  /  Video Gallery  /  Indian Army Cheetah Helicopter Crashes In Arunachal Near China Border

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு?

16 March 2023, 18:25 IST Muthu Vinayagam Kosalairaman
16 March 2023, 18:25 IST
  • Helicopter Crash in Arunachala Pradesh: அருணாச்சல பிரதேச மாநிலம் போம்டிலா நகரில் உள்ள மன்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. காலை 9.15 மணி அளவில் இந்த ஹெலிஹாப்டர் விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையின் தொடர்பை இழந்தது. இதில் பயணித்த இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று நிலையில், அவர்கள் இருவருரின் உடல்களும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ராணுவத்தினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேசம் பகுதியில் இந்திய ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. காலையில் பயிற்சி மற்றும் ரோந்து பணிக்காக இந்த ஹெலிகாப்டர் அந்த பகுதிக்கு சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என ராணுவத்தினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இதே பகுதியில் 5 ராணுவ வீரர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதே மாதத்தில் அருணாச்சல பிரதேசம் தவாங் என்ற பகுதியில் இந்திய ராணுவத்தின் எடை குறைவான ஹெலிகாப்டரான சீட்டா விபத்துக்குள்ளானது. சீனா எல்லை அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.
More