தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  India-born Author Salman Rushdie Stabbed On Stage In New York State

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மேடையில் கத்தியால் குத்தி தாக்குதல்!

Aug 13, 2022 12:36 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 13, 2022 12:36 PM IST

மும்பையில் பிறந்த பிரிட்டனில் வாழ்ந்து வந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கத்து குத்து தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் மேற்கு நியூயார்க் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த அவர் மீது மேடையில் வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், சல்மான் ருஷ்டி தாக்குதலுக்கு உள்ளானபோது அவரை நோக்கி பொதுமக்கள் ஓடி சூழ்ந்துகொண்டனர். கழுத்துப் பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக ஹெலிஹாப்டர் மூலம் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். சல்மான் ருஷ்டியின் 'தி சாட்டனிக் வெர்சஸ்' என்ற படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்வை தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி பல்வேறு முஸ்லீம் நாடுகளின் அதிருப்தியை சம்பாதித்தார். அவருக்கு ஈரான் நாட்டிலிருந்து கொலை மிரட்டல் வந்த நிலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ தொடங்கினார். இந்தியாவில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான ருஷ்டி, தன்னை நாத்திகராக வெளிப்படுத்திக்கொண்டார். இதன் விளைவாக உயருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, தலைமறைவாக வாழ்ந்து வந்தாலும் பிரிட்டன் அரசாங்கம் அவருக்கு போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்தது. அவரது டிரன்ஸ்லேடர்கள் மற்றும் பப்ளிஷர்கள் மீது கொலை முயற்சி நடத்தப்பட்ட பிறகு பள்ளி ஒன்றில் அவர் வாழ்ந்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் வரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் பலமுறை வீடுகளை மாறியுள்ளார். 1998ஆம் ஆண்டில் அவருக்கு கொலை மிரட்டல் வந்த பிறகு இவ்வாறு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தற்போது நியூயார்க் நகரில் வாழ்ந்து வரும் ருஷ்டி, பிரன்சு நாட்டை சேர்ந்த நய்யாண்டி இதழில் பேச்சுரிமைக்கான வழக்குரைஞராக உள்ளார். ருஷ்டி பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் அவருக்கு அச்சுறுத்தலும், புறக்கணிப்புகளும் இருந்து வருகிறது. 2007இல் ஈரான் மற்றும் பாகிஸ்தான் பழமைவாதத்துக்கு எதிரான போராட்டங்கள் ருஷ்டி எழுத்தின் தாக்கத்தின் காரணமாகவே நிகழ்ந்தது.

More