Prithvi II missile Test: வெற்றிகரிமாக பரிசோதனை நடத்தப்பட்ட பிருத்வி II ஏவுகணை
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட பிருத்வி-II ஏவுகணையின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. ஒடிசா மாநிலம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சந்திபூர் சோதனை தளத்தில் இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.இந்த ஏவுகணை அதன் இலக்கை அதிக துல்லியத்துடன் தாக்கியதோடு, அதன் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களும் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏவுகணையின் இரவு நேர திறன்களை சோதிப்பதற்காக இரவு நேரத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பிருத்வி-II ஏவுகணை, இந்தியாவின் அணுசக்திக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி இரவில் இந்த பரிசோதனை முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணையானது மேற்பரப்பிலிருந்து மேற்பரப்புக்கு பயன்படும் அணுகுண்டு திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணையாகும். இது 350 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. ஒற்றை நிலை திரவ எரிபொருள் ஏவுகணை இது போர்க்கப்பலை ஏற்றும் திறன் கொண்டது 500 முதல் 1000 கிலோ வரையிலான எடையை ஏற்றும் திறன் கொண்டதாக உள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் ஏவுகணை என்ற பெருமையை பெறுகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது.