Gaganyaan Test: தப்பிக்கும் அமைப்பு! வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட ககன்யான் விண்கலம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Gaganyaan Test: தப்பிக்கும் அமைப்பு! வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட ககன்யான் விண்கலம்

Gaganyaan Test: தப்பிக்கும் அமைப்பு! வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட ககன்யான் விண்கலம்

Oct 22, 2023 11:53 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 22, 2023 11:53 PM IST

  • இந்தியா தனது முதல் மனித விண்வெளி பயணமான ககன்யானுக்கான முதல் சோதனை பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த சோதனை விமானம் தொடக்கத்தில் சில குறைபாடுகளை எதிர்கொண்ட போதிலும், இந்த விமானத்தில் இருந்து தப்பிக்கும் அமைப்பை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ககன்யான் சோதனை பயணம் வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சோதனையின் விமானத்தில் குழு தப்பிக்கும் அமைப்பு குறித்தும், குழு தப்பிக்கும் தொகுதி, பாதுகாப்பாக வெளியேறுதல் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் இதை லிப்ட் செய்யும் முயற்சி இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. இன்னும் பல்வேறு கட்ட பரிசோதனைகள் ககன்யான் மிஷனில் மேற்கொள்ளப்படவுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மூன்று பேர் கொண்ட குழுவை 400 கிமீ சுற்றுப்பாதையில் மூன்று நாள்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

More