தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  How Isro Scientists Helped Build Ram Temple In Ayodhya That Will Last For Over 1,000 Years

Ram Temple: துளிக்கூட ஸ்டீல், இரும்பு கிடையாது..! இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் கட்டப்பட்ட ராமர் கோயில் - முழு விவரம்

Jan 20, 2024 10:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 20, 2024 10:30 PM IST
  • ஸ்டீல் மற்றும் இரும்பு ஒரு துளி அளவு கூட இல்லாமல் அயோத்தியி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் கட்டப்பட்டிருப்பதாகவும், ஆயிரம் ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும் என கோயில் கட்டுமான குழு தலைவர் கூறியுள்ளார். இரும்பின் ஆயுள் வெறும் 80 முதல் 90 ஆண்டுகள் வரை மட்டும் இருக்கும் என்பதால், கோயிலில் அதை எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்திய பாரம்பரிய கட்டிடகலையின் ஒருங்கிணைப்பாக ராமர் கோயில் இருப்பதாகவும், காட்டுமானத்துக்கு சில விஞ்ஞான முறைகளும் இணைக்கப்பட்டிருப்பதால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மொத்தம் 2.7 ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கும் நிலையில், 57 ஆயிரம் சதுர அடி அளவில் கட்டிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாடி கட்டிடத்துக்கான அமைப்பை கொண்டிருப்பதுடன், உயரம் 161 அடியாக உள்ளது. டெல்லியில் இருக்கும் குதுப் மினார் உயரத்தை ஒப்பிடுகையில் 70 சதவீதம் வரை உள்ளது. வட இந்திய கோயில்களின் வடிவமைப்பில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இது சந்திரகாந்தா சோம்புரா வடிவமைப்பு என்று அழைக்கப்படுகிறது. சுமார் 15 தலைமுறைக்கும் மேலாக சந்திரகாந்த் சோம்புரா குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்ட கோயில்களை வடிவமைத்துள்ளார்கள். கோயில் ஒரு பகுதி பார்வையாளர்கள் பிங்க் நிறத்தில் தெரியும் விதமாக கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள பான்சி பாஹர்புர் என்ற கல்லில் இருந்து இது பிரித்து எடுக்கப்பட்டது. கோயிலின் தரைத்தளத்தில் இடம்பிடித்திருக்கும் நெடுவரிசையின் எண்ணிக்கை 160 ஆகும். முதல் மாடியில் 132, இரண்டாம் மாடியில் 74 என உள்ளது.
More