Hindu Temple Vandalise in US: இந்து கோயிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்! பிரதமர் மோடிக்கு எதிராக வாசகங்கள்
- அமெரிக்காவிலுள்ள இந்து கோயில் ஒன்று காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்கள் கோயில் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் சுவாமி நாரயண சன்னதியில் இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது. காலிஸ்தானுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராக வெறுப்பு வாசகங்களும் கோயிலின் பல்வேறு பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கோயிலின் பிரதான நுழைவு வாயில் இருக்கும் போர்டில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வெறுப்பு பிரச்சார குற்றத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா இந்து பவுன்டேஷன் கோரியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமெரிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா பகுதிகளில் இது போன்று இந்து கோயில்கள் தாக்கப்படுவது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த செப்டம்பரில் கனடாவில் இந்து கோயில் ஒன்று கடுமையாக தாக்கப்பட்டது. இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவில் உள்ள சர்ரே பகுதியில் லட்சுமி நாரயண கோயில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா நாடுகளில் இந்தியா, இந்துக்களுக்கு எதிராக காலிஸ்தான் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசு கவலை தெரிவித்திருந்தது. இதற்கிடையே காலிஸ்தான் ஆதரவு அமைப்பு தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நிகில் குப்தா என்ற செக் குடியரசை சேர்ந்தவரை ஒப்படைக்கவும் அமெரிக்கா கோரி வருகிறது.