Tamil News  /  Video Gallery  /  High Drama After Roller-skater Almost Collides With King Charles Car

Video: பிரிட்டன் மன்னர் சார்லஸ் காரின் மீது மோத வந்த இளைஞரால் பரபரப்பு

18 September 2022, 21:04 IST Karthikeyan S
18 September 2022, 21:04 IST

பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு அவரின் மகனும், மன்னருமான மூன்றாம் சார்லஸ் காரில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே ஸ்கேட்டிங் செய்துகொண்டு வேகமாக வந்த இளைஞர், மன்னர் மூன்றாம் சார்லஸ் வந்துகொண்டிருந்த காரின் மீது மோத வந்தார். எனினும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். மன்னரின் அணிவகுப்பு எந்தவித இடையூறுமின்றி சென்றது. இதை அஞ்சலி செலுத்த கூட்டத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

More