சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை.. திணறிய வாகன ஓட்டிகள்.. விமான சேவைகள் பாதிப்பு..!
- சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு இருள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மணி நேரமாக சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. திடீர் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர்ப் பகுதியில் பெய்த திடீர் மழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.