Tamil News  /  Video Gallery  /  Gurugram Car Stunt Goes Horribly Wrong; 50-year-old Smashed To Death By Drunk Driver

Gurugram car stunt video: கார் வேகமாக மோதி முதியவர் பலி! குர்க்கிராமில் பயங்கரம்

10 November 2022, 1:27 IST Muthu Vinayagam Kosalairaman
10 November 2022, 1:27 IST

டெல்லி அருகே குருக்கிராம் பகுதியில் அமைந்திருக்கும் மது விற்பனை கடை அருகே போதையில் கார் ஓட்டி வந்த நபர், சாகசம் செய்கிறேன் என அதை டிரிஃப்ட் செய்துள்ளார். இதில் காரை பின் பகுதி வேகமாக மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாருதி எர்டிகா எஸ்யூவி காரை ஓட்டி வந்த அந்த நபர், மதுக்கடை அருகே வேகமாக வந்த வளைந்தவாறு காரை டிரிஃப்ட் செய்துள்ளார். அப்போது அந்த கடை அருகே சிலர் நின்று கொண்டிருந்த, காரில் வருபவர் கட்டுப்பாடு இன்றி வருவதை முன்னரே கணித்து அங்கிருந்து விலகி ஓடிச்சென்றனர். ஆனால் இதை கவனிக்காமல் நின்று கொண்டிருந்த அந்த பெரியவர் காரின் பின் பகுதி வேகமாக மோதியதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் சிலரும் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக காரில் பயணித்த 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அங்கு உணவகம் ஒன்று இவர்களுக்கும், மற்றொரு குழுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சத்தமிட்டுக்கொண்டே புறப்பட்டனர். பின்னர் எர்டிகா காரில் வந்தவர்கள் அங்கிருந்த மதுக்கடையில் பணிபுரிந்த இருவரை கொலை செய்ய தி்டடமிட்டு வந்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அங்கிருந்தவர்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வரும் போலீசார், இவர்களிடம் சண்டையிட்ட மற்றொரு குழுவை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

More