Gujarat election 2022:முதல் முறையாக வாக்களித்த இந்தியாவின் மினி ஆப்பரிக்கா
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Gujarat Election 2022:முதல் முறையாக வாக்களித்த இந்தியாவின் மினி ஆப்பரிக்கா

Gujarat election 2022:முதல் முறையாக வாக்களித்த இந்தியாவின் மினி ஆப்பரிக்கா

Updated Dec 01, 2022 11:27 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated Dec 01, 2022 11:27 PM IST

இந்தியாவின் பன்முகத்தன்மை அதனை சிறப்பு வாய்ந்ததாக வெளி உலகுக்கு காண்பிக்கிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அங்குள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமமான ஜாம்பூரில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு முதல் முறையாக வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் மினி ஆப்பரிக்கா என்று அழைக்கப்படும் இந்த கிராமத்து சிறப்பு வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. முதல் முறையாக வாக்களிக்கபோகும் மகிழ்ச்சியில் அந்த ஊர் மக்கள் வாக்குப்பதிவு தொடங்கும் முன்னர் அதிகாலையிலேயே ஆட்டம் ஆடி கொண்டாடியுள்ளனர். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் ஆப்பரிக்காவை சேர்ந்த சித்தி இணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என கூறப்படுகிறது. நீண்ட ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் எங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த கிராம வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் குஜராத், கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் வசிக்கும் இந்த இனத்தவர் மொத்தம் 5 லட்சம் பேர் இருப்பதாக புள்ளி விவர தகவல்கள் கூறுகின்றன.

More