தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Gaza University Campus Razed To Ground In Seconds; U.s. Seeks Answers From Israel

Gaza University: பலமான சத்தம்! ஒற்றை நொடியில் வெடித்து சிதறிய காசா பல்கலைகழகம் - இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல்

Jan 19, 2024 11:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 19, 2024 11:45 PM IST
  • தெற்கு காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் முன்னணி பல்கலைகழகத்தை வெடிகுண்டு வைத்து நொடிகளில் தகர்த்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை. இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இஸ்ரா என்ற அந்த பல்கலைகழகம் பிரதான கட்டிடம் வெடிகுண்டு வைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து பல்கலைகழகத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. காசா பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அமெரிக்கா, பொதுமக்களின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் இஸ்ரேல் இதில் கவனம் செலுத்தவில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்துக்கு எதிராக போரை தொடங்கியது இஸ்ரேல். இதுவரை காசா பகுதியில் 24,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2.3 மில்லியன் மக்கள் காசாவில் இருந்து வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கொடூர தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த பிரச்னை எழுந்தது.
More