Garuda Sevai: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை கோலாகலம்
- கருட பஞ்சமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.