தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்வி..மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்வி..மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்!

தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்வி..மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்!

Nov 06, 2024 06:54 PM IST Karthikeyan S
Nov 06, 2024 06:54 PM IST

  • அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக மாநாட்டில் விஜய் எங்குமே அதிமுகவை விமர்சிக்காத நிலையில், அதிமுக - தவெக கூட்டணி அமையும் என்ற யூகங்கள் எழுந்து வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "கடந்த காலங்களில் மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை கொடுத்ததால் அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்யவில்லை. பொதுவாக ஒரு ஆட்சி சரியில்லை, கட்சி சரியில்லை என்றால் தான் விமர்சனம் வரும். ஆனால், 31 ஆண்டுகாலம் சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது கட்சி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. ஆகவே விமர்சிக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

More