கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலை வைக்க அனுமதி மறுப்பு! சட்டப்படி சந்திப்போம் - சசிகலா பேட்டி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்திருக்கும் கோடநாடு எஸ்டேட்டுக்கு வருகை புரிந்தார் சசிகலா. மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் வந்து இறங்கிய சசிகலாவை எஸ்டேட் நிர்வாகிகள், பணியாளர்கள் வரவேற்றனர். அப்போது காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான இந்த எஸ்டேட்டில் அவரது சிலை வைக்க அனுமதி கோரினோம். ஆளும் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. “இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு செய்வோம். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என்று கூறினார்.