Viralimalai Jallikattu: விராலிமலையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. விராலிமலை-இனாம் குளத்தூர் சாலையில் உள்ள வெளியம்பூர் குளக்கரை திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியினை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். காலை 8 மணிக்கு தொட ங்கிய இப்போட்டி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கிடையே களத்தில் வீரர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதி முறைப்படி நடத்தப்படும் இப்போட்டியில் பரிசுகள் ஏதும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.