தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Fifa World Cup 2022: Iran Football Team Sings National Anthem; Secures Dramatic Win Over Wales At Qatar

FIFA world cup 2022: தேசிய கீதம் பாடி அமைதி போராட்டத்தை முடித்த ஈரான் வீரர்கள்

Nov 25, 2022 10:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 25, 2022 10:59 PM IST

பிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஈரான் அணி வீரர்கள் இரண்டாவது போட்டியில் தேசிய கீதம் பாடி தங்களது நாட்டில் நடத்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு அளித்து வந்த அமைதி ஆதரவை முடித்துக்கொண்டனர். வேல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது போட்டியில் ஈரான் வீரர்கள் தேசிய கீதத்தை பாடியுள்ளனர். அவர்கள் பாடும்போது ஈரான் ரசிகர்கள் ஸ்டேடியமே அதிரும் விதமாக குரல்களை எழுப்பி கத்தினர். இந்த போட்டியில் பெண் ரசிகை ஒருவர் ஈரான் நாட்டு கொடி,கண்களில் கண்ணீர் சிந்துவது போல் சிவப்பு நிற பெயிண்ட் அடித்து ஈரான் நாட்டு கால்பந்து அணியின் ஜெர்சியுடன் வந்திருந்தார். அவருக்கு அருகே இருந்த ஆண் ரசிகர் Women Life Freedom என அந்நாட்டு பெண்களுக்கு ஆதரவான வாசங்களை எழுதிய ஈரான் நாட்டு கொடியை கையில் வைத்திருந்தார். இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் எந்த நெருக்கடியில் வீரர்களுக்கு இல்லை எனவும், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை எனவும் ஈரான் அணியின் கேப்டன் மெஹ்தி தரேமி கூறினார். முன்னதாக, தங்களது முதல் ஆட்டத்தின்போது ஈரானில் நடைபெற்று ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக வீரர்கள் அனைவரும் தேசிய கீதம் பாடாமல் அமைதி போராட்டத்தை வெளிப்படுத்தினர். அந்தப் போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவினர். இதையடுத்து இரண்டாவது போட்டியில் வேல்ஸ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர். ஈரான் அரசுக்கு ஆதரவான ரசிகர்கள் சிலர் எதிர் தரப்பினரிடமிருந்து கொடி, டி-ஷர்ட் உள்பட இதர பொருள்களை பறித்து சென்ற நிகழ்வும் ஸ்டேடியத்தில் வைத்து நிகழ்ந்துள்ளது. ஹிஜாப் அணியாத காரணத்தால் மஹ்சா அமினி என்ற இளம்பெண் ஈரானில் வைத்து கலாச்சார பாதுகாப்பு காவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை எதிர்த்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக ஈரானில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

More