Elephant Attack: திருவிழாவில் மதம்படித்த யானையிடம் சிக்கிய நபர்.. தலைகீழாக தூக்கி வீசிய சம்பவம் - கேரளாவில் அதிர்ச்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Elephant Attack: திருவிழாவில் மதம்படித்த யானையிடம் சிக்கிய நபர்.. தலைகீழாக தூக்கி வீசிய சம்பவம் - கேரளாவில் அதிர்ச்சி

Elephant Attack: திருவிழாவில் மதம்படித்த யானையிடம் சிக்கிய நபர்.. தலைகீழாக தூக்கி வீசிய சம்பவம் - கேரளாவில் அதிர்ச்சி

Jan 08, 2025 07:32 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2025 07:32 PM IST

  • கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த விழாவின் போது யானைக்கு மதம் பிடித்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. திரூரில் உள்ள புதியங்கடி பள்ளி வாசலில் ஆண்டு நேர்ச்சா விழா நடைபெற்ற நிலையில், யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்தது. இதன் பின்னர் கூட்டத்தை நோக்கி அந்த யானை ஆவேசமாக ஓடியதுடன், ஒருவரை தனது துதிக்கையால் தூக்கி தலைகீழாக இருபுறமும் ஊசலாட வைத்து விட்டு வீசியது. இந்த நேரத்தில் திருவிழாவை காண வந்த மக்கள் வெவ்வேறு திசைகளில் ஓடி, கூட்ட நெரிசல் சிக்கி பலரும் படு காயமடைந்தனர். இந்த கோர சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதம் பிடித்த யானை காட்டுப்பாடின்றி ஆக்ரோஷமாக நடந்த கொண்ட விடியோக்கள் வெளியாகி பார்ப்போரை குலை நடுங்க செய்துள்ளன.

More