EPS: ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?.. சட்டமன்றத்தில் நடந்தது என்ன? - ஈபிஎஸ் ஆவேச பேட்டி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Eps: ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?.. சட்டமன்றத்தில் நடந்தது என்ன? - ஈபிஎஸ் ஆவேச பேட்டி!

EPS: ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?.. சட்டமன்றத்தில் நடந்தது என்ன? - ஈபிஎஸ் ஆவேச பேட்டி!

Published Apr 08, 2025 04:10 PM IST Karthikeyan S
Published Apr 08, 2025 04:10 PM IST

  • சட்டப்பேரவையில் எதிர்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவையின் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுகவுக்குதான் முதலில் பேச வாய்ப்பு தரவேண்டும். ஆனால், திமுக கூட்டணி கட்சியினருக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாங்கள் மக்கள் பிரச்னையைத்தான் சட்டமன்றத்தில் பேசுகிறோம். ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

More