Tamil News  /  Video Gallery  /  Dubai: Massive Fire Rips Through 35-storey Tower Near Burj Khalifa; Moment Caught On Cam

Fire near Burj Khalifa: புர்ஜ் கலிஃபா அருகே 35 மாடி கட்டடத்தில் தீ விபத்து

08 November 2022, 17:05 IST Muthu Vinayagam Kosalairaman
08 November 2022, 17:05 IST

உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கஃலிபா அருகே அமைந்திருக்கும் 35 மாடி உயர கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இரவு 2.30 மணியளவில் தீ பிடித்த எரிந்த நிலையில் கட்டடம் முழுவதும் பரவு கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தீ பற்றி எரிந்ததன் காரணமாக அந்தப் பகுதியே கருமையான புகை மண்டலமாக காட்சியளித்தது. சுமார் 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்ட நிலையில், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக நான்காவது மாடியில் முதலில் பற்றி எரிந்த தீ, கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. கட்டடத்தின் ஒரு பக்கம் மட்டும் தீ பிடித்து எரிந்துகொண்டிருந்த நிலையில், மறுபக்கத்தின் வழியாக அங்கிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியின்போது ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்ட பிறகு கரி பூசியவாறு கட்டடம் காட்சியளித்தது. துபாய் போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஏப்ரலில் புர்ஜ் கஃலிபா எதிர் திசையில் உள்ள உயரமான கட்டடத்தில் இதுபோன்று தீ விபத்து ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டில் மிகப் பெரிய தீ விபத்து இந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலையில், துபாயில் அமைந்துள்ள உயரமான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

More